சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவல்லிக்கேணி பெரிய தெரு பகுதியில், பாதாள சாக்கடை பொங்கி மழைநீருடன் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதை சரிசெய்ய கோரிக்கை வலுத்துள்ளது.