சண்டையை தட்டிக்கேட்க சென்றவரிடம் வழிப்பறி: மூன்று பேர் கைது

2பார்த்தது
சண்டையை தட்டிக்கேட்க சென்றவரிடம் வழிப்பறி: மூன்று பேர் கைது
கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜேஷ் (கார்பென்டர்) என்பவர், இரு தினங்களுக்கு முன் வீட்டின் வெளியே நின்றபோது, அங்கு வந்த 4 பேர் வேறொரு நபருடன் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட ராஜேஷை, அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 2,000 பறித்துச் சென்றது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், மனோஜ், ஜெயச்சந்திரன், அபினேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி