சென்னை வண்ணாரப்பேட்டையில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணியின்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோகுல்(30) என்பவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.