
சென்னை: பணம் இல்லை எனப் பேச வேண்டாம் - மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், எடுத்த எடுப்பிலேயே கஜானாவில் பணம் இல்லை எனப்பேச வேண்டாம் என்றும் தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்ளாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாக்களித்த மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.
















