அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், திமுகவைப் போல தவெக அரசும் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதில் தோல்வியடையக் கூடாது என்றும் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக கொலைகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.