எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2025 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழ்நாட்டு மீனவர்கள், அந்நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பியதும், மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.