சென்னை: அபாயச் சங்கிலியை இழுத்த 96 பேர் மீது வழக்கு

165பார்த்தது
சென்னை: அபாயச் சங்கிலியை இழுத்த 96 பேர் மீது வழக்கு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.