இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடல்நிலையில் சரியில்லாமல் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அவரது உடல்நிலை பின்னடவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து தமிழக முதல்வர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.