சென்னை: பறக்கும் ரயில் வழித்தடத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

0பார்த்தது
சென்னை: பறக்கும் ரயில் வழித்தடத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்
சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்மயமாக்கும் பணிகள் உட்பட அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, இந்த வழித்தடம் டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையில் சரக்கு ரயில் பெட்டிகளைக் கொண்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி