மகளிருக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சர்
ஸ்டாலின் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.