சென்னை: மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்.. இளைஞர் மரணம்

0பார்த்தது
சென்னை: மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்.. இளைஞர் மரணம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (21), மது அருந்தும் பழக்கத்தால் மனமுடைந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தீபாவளிக்குப் பிறகு சரிவர வேலைக்குச் செல்லாமல், சம்பளப் பணத்தையும் மதுவுக்கே செலவழித்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தகவல். அபிராமபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.