சென்னையில் கல்லூரி மாணவி பலி

3பார்த்தது
சென்னையில் கல்லூரி மாணவி பலி
சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கேரளாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஜூனுவின் தலை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற மூன்று நபர்கள் லேசான காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி