மணலிபுதுநகர்: வாலிபர் வெட்டி கொலை

0பார்த்தது
மணலிபுதுநகர்:  வாலிபர் வெட்டி கொலை
மணலிபுதுநகர் அருகே பழைய நாப்பாளையம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவர், உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு நேற்று (மே 22) சென்றபோது, இரவு 9:00 மணியளவில் அங்கு வந்த கும்பலால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது அண்ணன் நவீன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். மணலிபுதுநகர் போலீசார் நவீனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி