சென்னை முழுவதும் இன்று போலீசார் அதிரடி சோதனை

35பார்த்தது
சென்னை முழுவதும் இன்று போலீசார் அதிரடி சோதனை
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த. வெ. க அரசு ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சர் விஜய் உடனடியாக 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசின் உத்தரவின் பேரில், குற்றச் செயல்களை ஒடுக்கவும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு சோதனை (Special Drive) நடைபெற்றது. இந்த சோதனையில் 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.