சென்னை போயஸ் கார்டனில் நடிகர்
ரஜினிகாந்த் இன்று (மே 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாகவும், அவருடன் 40 ஆண்டுகால நட்பு இருப்பதாகவும் கூறினார்.
விஜய் முதல்வராவதை தடுக்கவே ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார். சின்ன வயதிலிருந்தே விஜய்யை பார்த்து வருவதாகவும், அவர் தேர்தலில் வெற்றி பெற்றதில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டதாக கூறிய ரஜினி,
விஜய் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாகவும் கூறினார்.