சென்னை விமான நிலைய அலுவலக வளாகத்தில் காவலாளி தற்கொலை

3பார்த்தது
சென்னை விமான நிலைய அலுவலக வளாகத்தில் காவலாளி தற்கொலை
சென்னை விமான நிலைய அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவன காவலாளியாகப் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தி கன்னியப்பன் (57) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஞாயிற்றுக்கிழமை காலை பணியில் இல்லாததால் தேடியபோது, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இரண்டாவது தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து சென்னை விமான நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி