
சென்னை விமான நிலையத்தில் 15கோடி மதிப்பு போதைபொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கென்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில், அவர் ரூ. 15 கோடி மதிப்பிலான 850 கிராம் கொகெய்னை கேப்சூல்களாக மாற்றி விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் கொகெய்னைப் பறிமுதல் செய்து, அந்த இளம்பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
























