சென்னையில் 858 டன் பழைய பொருட்கள் அகற்றம்

0பார்த்தது
சென்னையில் 858 டன் பழைய பொருட்கள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் போன்ற திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் புதிய நடவடிக்கை கடந்த 11.10.2025 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை 18 சனிக்கிழமைகளில் 2,165 நபர்களிடமிருந்து 858.40 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நேற்று (07.02.2026) ஒரே நாளில் 60 இடங்களிலிருந்து 47.75 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்தில் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி