சென்னையில் கொடுங்கையூரைச் சேர்ந்த உணவக உரிமையாளர் பாலாவிடம், பணம் கேட்டு தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். வசந்த் மற்றும் நாராயணன் ஆகிய இருவர், பாலா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்தபோது, அவரை கட்டையால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாலா அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.