மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் ஓட்டேரி போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே கே.கே. நகர், ஓட்டேரி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
