சென்னை கே. கே நகர் இ. எஸ். ஐ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவக்கல்லூரி நான்காம் ஆண்டு படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்ற மாணவர் கல்லூரி ஆன்லைன் உணவு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் ஆல்பர்டை ஒப்பந்த பணியாளர் பாலா (எ) பாலஜீவகன் கேட்டுள்ளார். மேலும் பாலா மாணவரை கடுமையாக தாக்கினார்.
இந்த விவகாரத்தில் பாலா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எம்ஜிஆர் நகர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில், மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று காலை மருத்துவக்கல்லூரி உள்ளே வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாலா (எ) பாலஜீவகனுக்கு, விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.