சென்னை, வியாசர்பாடி, சாமியார் தோட்டம், 1வது தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி, 65. இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக, நேற்று வியாசர்பாடி, இ. எச். ரோட்டில் உள்ள பிசியோ தெரபி சென்டருக்கு வந்தார்.
அங்கு புதிதாக பணிக்கு சேர்ந்த பிரியா என்பவர், மகாலட்சுமிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், அவரது கழுத்தில் இருந்த செயின், மோதிரத்தை கழற்றி வைக்கும்படி கூறியுள்ளார்.
மகாலட்சுமி 18 கிராம் எடையுள்ள தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை கழற்றி வைத்துள்ளார். சிகிச்சை முடிந்து மகாலட்சுமி எழுந்து பார்த்த போது, அருகில் வைத்திருந்த செயின், மோதிரம், மொபைல்போன் மற்றும் பேக் ஆகியவை திருடு போனது தெரிந்தது. புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.