சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, கவியரசு கண்ணதாசன் நகரில், சிஎம்டிஏ சார்பில் ரூ. 11. 34 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் பல முக்கிய அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த புதிய பேருந்து நிலையம் அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.