தண்டையார்பேட்டை: போதை பெட்டமைன் விற்பனை.. 6 பேர் கைது

79பார்த்தது
தண்டையார்பேட்டை: போதை பெட்டமைன் விற்பனை.. 6 பேர் கைது
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரயில்வே யார்டு அருகே சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு போலீஸார் மற்றும் ஆர். கே. நகர் போலீஸார் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் அவர்களது உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அதில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், ஒரு துப்பாக்கி, 15 தோட்டாக்கள் இருந்ததை போலீஸார் கண்டனர். அதனை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த முகமது அலி(25), சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது அசார்(26), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் கான்(26), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ் அலி(30), செங்குன்றத்தைச் சேர்ந்த மீனா(46), சேலையூரைச் சேர்ந்த பர்வேஸ் உசேன்(26) என்பது தெரியவந்தது. அந்தவகையில், இவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரயில்வே யார்டு அருகே மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது போலீஸிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைனின் மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி