சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடற்கரை - திருவள்ளூர், சென்ட்ரல் - திருவள்ளூர், சென்ட்ரல் - திருத்தணி, சென்ட்ரல் - கடம்பத்துார், திருவள்ளூர் - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், திருநின்றவூர் - சென்ட்ரல் ஆகிய தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக, சென்ட்ரல் - அரக்கோணம், திருத்தணி, ஆவடி, அரக்கோணம், திருத்தணி இடையே 17 மின்சார சிறப்பு ரயில்களும், திருவள்ளூர் - அரக்கோணம், திருத்தணி இடையே 13 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.