முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவுதம்(24) என்பவரிடம், செயலி மூலம் அறிமுகமான ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து, ஜி-பே மூலம் ரூ.24,000 பறித்துச் சென்றனர். இதுகுறித்து கவுதம் அளித்த புகாரின் பேரில், நந்தம்பாக்கம் போலீசார் ராஜேஷ், மணிகண்டன், வரதராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.