கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் இயக்கம் தாமதம்

1பார்த்தது
கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் இயக்கம் தாமதம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதிகாலையில் தொடங்கிய பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது சிரமமாக இருந்தது. புறநகர் மின்சார ரயில்களும் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை வழித்தடங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி