பெரம்பூர் ரயில் நிலையத்தில் செயின் பறித்தவர் கைது

330பார்த்தது
பெரம்பூர் ரயில் நிலையத்தில் செயின் பறித்தவர் கைது
சென்னையில், டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட பழக்கத்தால், 12 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து, செயினை மீட்டனர். பெரம்பூரைச் சேர்ந்த செல்வராஜன் என்பவர், 3ம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது, அவருடன் மது அருந்திய அரவிந்த் நாராயணன் என்பவர், செல்வராஜனின் 12 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில், அரவிந்த் நாராயணன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி