பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 50 வயதான பத்மாவதி என்பவரின் மகள் மோனிஷா (16) ஒரு வாரமாக உடல்நலமின்றி இருந்தார். நேற்று முன்தினம் (மே 25) நள்ளிரவு மூச்சுத்திணறல் காரணமாக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து திரு. வி. க. நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.