தமிழக சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 25 பேர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் வாக்களித்த பின்னர் வெளிநாடு செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டனர். மேலும், கள்ள ஓட்டு போட்டதாக மதுரை விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். கள்ள ஓட்டு போடப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.