சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியை சேர்ந்த புஜங்கர் ராம் என்பவர், தனது வீட்டில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் மாயமானதாக புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், புஜங்கர் ராமின் மகள் ஐஸ்வர்யாவின் தோழி ஜெயஸ்ரீ மூலம் அறிமுகமான ஸ்ரீ தீப தர்ஷன் என்பவர், 'வீட்டில் தீய சக்தி உள்ளது, அதை விரட்ட பூஜைக்கு நகைகள் வேண்டும்' என்று கூறி 70 சவரன் நகைகளை மோசடி செய்து சுருட்டியது தெரியவந்தது. இதையடுத்து அரும்பாக்கம் பகுதியில் வசித்த தீப தர்ஷனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 63 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய ஜெயஸ்ரீயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.