சென்னையின் அயனாவரம் பகுதியில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகு, இரவு நேரங்களில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், எஸ்ஐ மேகநாதன் தலைமையிலான அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, சரித்திர பதிவேடு ரவுடி ஒருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.