சென்னையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

1பார்த்தது
சென்னையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
சென்னை மாநகராட்சியில் இதுவரை 12 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் 29,267 பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இன்று (சனிக்கிழமை) தண்டையார்பேட்டை மண்டலம், கலாயணபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 13-வது மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகிய சேவைகள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி