சென்னை: மாணவி விவகாரம்.. ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

69பார்த்தது
சென்னை: மாணவி விவகாரம்.. ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவி படிக்க வேண்டும்; அவரிடம் விடுதி உள்பட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துணை ஆணையர்கள் சிநேகா பிரியா, ஜமான் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து குழு அமைக்க ஒப்புக் கொண்டது. மாணவிக்கு தேவையான உளவியல் ஆலோசனை மற்றும் உதவிகளை பல்கலை. வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். 

மாணவி தனது படிப்பை தொடர்வதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வந்து புகார் அளித்தது பாராட்டுக்குரியது. மாணவியின் கல்விச் செலவு, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அண்ணா பல்கலைக்கழகமே ஏற்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

தொடர்புடைய செய்தி