தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலித்தது. இதுகுறித்து சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் கூறுகையில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மத்திய அரசிடமிருந்து வந்த உத்தரவின்படி, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம், தேசிய கீதம், அதன் பின் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைப்படி கீதங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆளுநர் மத்திய அரசின் உத்தரவை மட்டுமே பின்பற்ற முடியும் என்று கூறி மாற்றத்தை ஏற்க மறுத்துவிட்டார் என முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.