சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள எல்லமுத்தம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக கோவில் அர்ச்சகர் அளித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்வர்பாஷா (23) மற்றும் ஹரிபிரசாந்த் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.