சென்னையில், வீட்டின் சாவியை காலணிக்குள் மறைத்து வைத்திருந்த சுகுமாரன் என்பவரின் வீட்டில், ரூ. 4 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோயின. செம்பியம் போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியைச் சேர்ந்த இந்துமதி (35) என்பவரைக் கைது செய்தனர். இவர், சம்பவத்தன்று சுகுமாரன் வீடு மற்றும் பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவில் உள்ள மற்றொரு வீடு என இரண்டு இடங்களில் திருடியதும் தெரியவந்தது.