பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெண் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய இளைஞர் கைது

0பார்த்தது
பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெண் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய இளைஞர் கைது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற இளைஞர், பெண் டிக்கெட் பரிசோதகர் சாரதாவிடம் ரயில் டிக்கெட்டை கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சாரதாவை அப்துல் ரகுமான் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அசாம் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி