கொடுங்கையூர், ஜம்புலி தெருவைச் சேர்ந்த ரவுடி முனுசாமி (41) மற்றும் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ரவுடி அரவிந்த் (28) ஆகியோர் நேற்று பூங்கா முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ஹரிபிரசாத் என்பவர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஹரிபிரசாத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.