இராயபுரம் - Royapuram

வங்கியில் போலி ஆவணம் மூலம் 7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி

வங்கியில் போலி ஆவணம் மூலம் 7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி

எழும்பூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் சேதுமாதவன் அளித்த புகாரின் பேரில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பெரம்பூரைச் சேர்ந்த சரஸ்வதி (46) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெமிலா பேகம் (49) ஆகியோர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, 7 கோடி ரூபாய் வீட்டுக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் அந்தக் பணத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். நேற்று, இவ்விருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களைத் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை