சென்னையின் முக்கிய புறநகர் பாதையில் இயக்கப்படும் 10 ஏசி ரயில் சேவைகள் பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தையும், தடையற்ற தரைவழிப்
போக்குவரத்து இணைப்பையும் வழங்குகின்றன. இந்த நிலையில், மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புறநகர் ஏசி ரயிலில் 1.30 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது பயணிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய சாதனையாகும்.