சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சேர்ந்த சிரஞ்சீவி (21), அஸ்வின் (21) மற்றும் கோவையைச் சேர்ந்த மதன் குமார் (21) ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.