கோயிலில் பைக் திருட்டு: வாலிபர் கைது

1பார்த்தது
கோயிலில் பைக் திருட்டு: வாலிபர் கைது
சென்னை அயனாவரம், மைலப்ப தெருவைச் சேர்ந்த முனியப்ப ராஜா என்பவர், கடந்த 3ம் தேதி இரவு பில்கிங்டன் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பைக்கில் சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது, அவரது பைக் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட ஓட்டேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி