ராயபுரத்தில் சுரேஷ்(45) என்பவர் நான்கு நாட்களுக்கு முன்பு வாங்கிய காரை நேற்று வீட்டு அருகே நிறுத்தி உள்ளார். நள்ளிரவில் திடீரென அவரது கார் தீப்பிடித்து எரிந்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்சாரி(38) என்பவரது காரிலும் தீ பரவியது. பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் இரு கார்களின் முன்பக்கமும் முற்றிலும் எரிந்து நாசமானது.