ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

399பார்த்தது
ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற இளைஞரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று சையது இப்ராஹிம் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்ததை அறிந்த இளம்பெண், திருமண மண்டபத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் இளம்பெண்ணின் ஆதரவாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி