சென்னை: 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; கமிஷனர் உத்தரவு

50பார்த்தது
சென்னை: 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; கமிஷனர் உத்தரவு
சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த உஷாராணி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சேகர் சிங் புதிய வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாமஸ் பேசின்பாலம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபக்குமார் திருமங்கலம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வராணி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன் யானைகவுனி சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் துறைமுகம் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வனிதா விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயலட்சுமி ஸ்டான்லி அரசு மருத்துவமனை சட்டம் ஒழுங்குக்கும், புதிய வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த கிருஷ்ணராஜ் நந்தம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், தலைமை செயலக காலனி குற்றப்பிரிவில் இருந்த ஹரிஹரசுதன் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி