ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி, தன்னை 8 வருடங்களாகக் காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தை ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தடுத்து நிறுத்தச் சென்றார். அவருடன் பெண் அமைப்பினர், சமூக ஆர்வலர்களும் சென்றிருந்தனர். அங்கு
போராட்டம் வெடித்தபோது, பாதுகாப்புக்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, அக்பர் அலி என்பவரை முகத்தில் குத்தி வெளியேற்றினார். "இந்துவாக இருந்த என்னை முஸ்லிமாக மாறச் சொன்னான், தற்போது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்ய முயல்கிறான்" என்று அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.