சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவரான மாரியப்பன், லாரியில் ஏற்றி இருந்த கண்டெய்னரை இறக்கிவிட்டு, மீண்டும் லாரியை இயக்கிய போது, எதிர்பாராத விதமாக லாரி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் லாரியின் கேபின் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மாரியப்பன் கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டார்.