சென்னை: கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

57பார்த்தது
சென்னை: கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. 

இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்படும். மீன்பிடித் தடைக்காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. 

இந்தத் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களைச் சீரமைக்கும் பணியைச் செய்வர். அதன்படி, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்த மீன்பிடித் தடைக்காலம் வரும் 14ம் தேதி முடிவுக்கு வருகிறது. அன்றைய தினம் நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் செல்வார்கள். இதையொட்டி, காசிமேடு மீனவர்கள் மீன்பிடிச் சாதனங்களைத் தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்ற

தொடர்புடைய செய்தி