சென்னை: முதல் நாளிலேயே உச்சத்தை தொட்ட தங்கம் விலை

73பார்த்தது
சென்னை: முதல் நாளிலேயே உச்சத்தை தொட்ட தங்கம் விலை
சென்னையில் இன்று (ஜன., 01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ. 7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ. 56,880-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 7,110-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்தது. அதன்படி, ஒரு சவரன், ரூ. 57,200-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ. 7,150-க்கு விற்பனை செய்யப்பட்கிறது.

தொடர்புடைய செய்தி